மாமல்லபுரம் : டெங்குவிற்கு பலியான கல்லூரி மாணவி.! சோகத்தில் மூழ்கிய கிராமம்.!
near mamallapuram college student died for dengu fever
சென்னையில் உள்ள மாமல்லபுரம் அடுத்த கொக்கிலமேடு மீனவர் பகுதியைச் சேர்ந்தவர் ரவீந்திரன். இவர் அதே பகுதியில் மளிகை கடை ஒன்று வைத்து நடத்தி வருகிறார். இவரது மகள் நிஷாந்தினி.
இவர் பொன்னேரியில் உள்ள ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் இளங்கலை முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கடந்த ஐந்து நாட்களாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் இன்று அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
படிக்கும் வயதில் மாணவி டெங்குவால் உயிரிழந்ததால் மாணவியின் பெற்றோரும், நண்பர்களும் கதறி அழுதனர். டெங்குவிற்கு கல்லூரி மாணவி பலியானதால் கொக்கிலமேடு கிராமமே சோகத்தில் காணப்பட்டது.
English Summary
near mamallapuram college student died for dengu fever