செங்கல்பட்டு : மாமல்லபுரம் அருகே வடமாநில இளைஞரைத் தாக்கிய இருவர் கைது.! - Seithipunal
Seithipunal


பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னா நகரை சேர்ந்தவர் நூர்ஆலம். இவர் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரம் அருகே கடம்பாடி பகுதியில் வாடகை வீட்டில் தங்கி கட்டிட வேலை செய்து வருகிறார். 

இந்நிலையில் இவர் பூஞ்சேரி பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் சமையலுக்கு தேவையான மளிகை பொருட்களை வாங்கிக்கொண்டு வெளியில் வந்தார். அப்போது ஒரு இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் அந்த வழியாக வேகமாக வந்து கொண்டிருந்தனர். இதையடுத்து இந்த இருசக்கர வாகனம் சாலையில் நடந்து சென்ற நூர்ஆலம் மீது மோதுவது போல் வந்துள்ளது. 

இதைத்தொடர்ந்து, இருசக்கரவாகனத்தில் வந்தவர்கள் வண்டியைவிட்டு கீழே இறங்கி ஆரன் அடித்தால் ஒதுங்கி செல்ல முடியாதா? என்று நூர் ஆலமிடம் தகராறில் ஈடுபட்டு, அவர்கள் மூன்று பேரும் நூர் ஆலமை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பிச்சென்று விட்டனர். 

இதில் பலத்த காயமடைந்த நூர்ஆலம் சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளித்தார். அதன் படி, போலீசார் இருசக்கரவாகனத்தில் வந்த மூன்று பேரை தடுத்து நிறுத்தி விசாரணை செய்தனர். அவர்களில் ஒருவர் போலீசிடம் இருந்து தப்பித்து ஓடி விட்டார். இதையடுத்து போலீசார் பிடிப்பட்ட இரண்டு பேரிடமும் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். 

அப்போது அவர்கள் இருவரும் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால், போலீசார் அவர்கள் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்தனர். அந்த விசாரணையில் அவர்கள் பூஞ்சேரி பகுதியை சேர்ந்த திவாகர் மற்றும் வாயலூர் பகுதியை சேர்ந்த ஜேம்ஸ் என்பதும் 

அவர்கள் பீகார் வாலிபரை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பிச்சென்றதும் தெரியவந்தது. அதன் பிறகு போலீசார் அவர்கள் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர். மேலும், தப்பி ஓடிய மற்றொருவரையும் போலீசார் தேடி வருகின்றனர். 

சமீபத்தில் வடமாநில வாலிபர்கள் மீது தாக்குதல் நடத்தியது போன்ற வீடியோ வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near mamallapuram two peoples arrested for attack north state youth


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->