ஏழு பிள்ளைகளைப் பெற்ற மூதாட்டி.! ஆர்டிஓ அலுவலகத்தில் தஞ்சம்.!  - Seithipunal
Seithipunal


நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் தாலுகாவில் ஓவேலி பேரூராட்சி நியூஹோப் பகுதியை சேர்ந்தவர் முத்தம்மா. இவர் கணவர் ஏற்கனவே இறந்து விட்டார்.  இவருக்கு மூன்று ஆண் மற்றும் நான்கு பெண் பிள்ளைகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகி தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். 

இந்நிலையில், நேற்று முத்தம்மா கூடலூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்கு வந்து அங்குள்ள பொதுமக்களிடம், எனது பிள்ளைகள் யாரும் என்னை கவனிப்பதில்லை. இந்த  வயதான காலத்தில் பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளாகி வருவதனால் அதிகாரிகளை சந்திக்க வந்துள்ளதாக கண்ணீர் மல்க தெரிவித்தார்.

இதையடுத்து, அலுவலகத்தில் ஆர்.டி.ஓ. இல்லாததால் கிராம நிர்வாக அலுவலர் சாம் சுந்தரி மற்றும் கிராம உதவியாளர் சதீஷ் உள்ளிட்டோர் முத்தம்மாவிடம் விசாரணை செய்தனர். 

அப்போது முத்தம்மா அவர்களிடம் தெரிவித்ததாவது, "தான் ஓவேலியில் உள்ள எஸ்டேட்டில் பணியாற்றி ஓய்வு பெற்றதாகவும், அனைத்து பிள்ளைகளையும் நல்ல நிலைக்கு கொண்டு வந்ததாகவும் தெரிவித்தார். 

ஆனால், தற்போது தன்னை கவனிப்பதற்கு யாரும் முன் வருவதில்லை. இதனால், இந்த வயதான காலத்தில் நிம்மதியாக இருப்பதற்காக ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் தஞ்சம் அடைந்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார். 

இதையடுத்து, வருவாய்த்துறையினர் கூடலூர் போலீசில் புகார் அளித்தனர். அதன்படி, கூடலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏழு பிள்ளைகளை பெற்றும் கவனிப்பதற்கு ஆள் இல்லாமல், மூதாட்டி ஒருவர் கண்ணீருடன் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் தஞ்சம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near neelagiri old lady going to rto office


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->