நெல்லை : வேலைக்கு சென்ற பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த 4 பேர் கைது.! - Seithipunal
Seithipunal


தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவிலை சேர்ந்த பெண் ஒருவர் அந்த பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில், படுகாயங்களுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரை அங்குள்ள மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது அவர் கற்பழிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. 

இதையடுத்து, சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அந்த தகவலின் படி, போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அதில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. 

அதன் விவரம் பின் வருமாறு :- "மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வரும் பெண்ணின் கணவர் உயிரிழந்ததனால், தனது குழந்தைகளை காப்பாற்றுவதற்காக அந்த பெண் நெல்லையில் வேலைக்கு சென்று வந்துள்ளார். 

அப்போது அந்த பெண்ணுக்கு வண்ணார்பேட்டை சாலை தெருவை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனரான முருகன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், சம்பவத்தன்று காலை முருகன் அந்த பெண்ணை அருகிலுள்ள ஒரு செங்கல் சூளைக்கு அழைத்து சென்றுள்ளார். 

அதன் பின்னர் அங்கு மறைந்திருந்த முருகனின் நண்பர்களான வண்ணார்பேட்டை சாலை தெருவை சேர்ந்த மணிகண்டன், பேராட்சி, அய்யாசாமி உள்ளிட்டோரை அழைத்துள்ளார். இதையடுத்து அவர்கள் நான்கு பேரும் சேர்ந்து தங்களது ஆசைக்கு இணங்குமாறு அந்த பெண்ணை வற்புறுத்தி உள்ளனர். 

இதற்கு, அந்த பெண் மறுப்புத் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த நான்கு பேரும் அவரை அடித்து உதைத்து, கட்டாயப்படுத்தி கூட்டு பலாத்காரம் செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதனால், மிகவும் சோர்வடைந்த அந்த பெண் தனது வீட்டுக்கு புறப்பட்டு சென்றுள்ளார். 

இதைத்தொடர்ந்து அவருக்கு காயங்களால் ஏற்பட்ட வலி அதிகரித்ததனால், சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார் என்பது  விசாரணையில் தெரிய வந்தது. 

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக அந்த பெண் அளித்த புகாரின் படி, பாளை அனைத்து மகளிர் போலீஸ் தலைமை காவலர் ராமேஸ்வரி விசாரணை மேற்கொண்ட அவர் முருகன் உள்பட நான்கு பேர் மீதும் கற்பழிப்பு வழக்குப்பதிவு செய்து கைது செய்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near nellai four peoples arrested for sexual harassment case


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->