நடுவழியில் நின்ற மலை ரெயில் - காரணம் இதுதானா? - Seithipunal
Seithipunal


நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் "மலை ரெயில்" இயக்கப்படுகிறது. இந்த மலை ரெயில் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரைக்கும், அங்கிருந்து ஊட்டிக்கும் இயக்கப்படுகிறது. 

சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களில் செல்வதை விட மலை ரெயிலில் செல்லும்போது இயற்கை அழகை ரசித்தவாறே செல்லலாம் என்பதால் பலரும்  மலைரெயிலில் செல்லவே ஆர்வம் காட்டுகிறார்கள். அதிலும் குறிப்பாக வெளிநாட்டில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் மலைரெயிலில் செல்வதற்கே அதிகம்  விரும்புகிறார்கள். 

இந்த மலை ரெயிலில் செல்லும் போது இயற்கை அழகை ரசிப்பது மட்டுமல்லாமல் யானை, கரடி உள்ளிட்ட வன விலங்குகள் மற்றும் பறவைகளையும் ரசித்தவாறே செல்லலாம். அவ்வாறு செல்லும் போது சில நேரங்களில் யானைகள் தண்டவாளத்தில் ரெயில் செல்லாத அளவிற்கு மறைத்து கொண்டு நிற்கும். 

இதனால், மலை ரெயில் நிறுத்தப்பட்டு யானைகள் அங்கிருந்து சென்றபிறகே ரெயில் புறப்பட்டுச் செல்லும். இந்த நிலையில் நேற்று மலை ரெயில் குன்னூரில் இருந்து புறப்பட்டு மேட்டுப்பாளையம் நோக்கி வந்து கொண்டிருந்தது. 

அப்போது திடீரென மூன்று காட்டு யானைகள் தண்டவாளம் வழியாக நடந்து வந்தன. இதைப்பார்த்து சுதாரித்துக்கொண்ட ரெயில் ஓட்டுனர்கள் துரிதமாக செயல்பட்டு ரெயிலை நிறுத்தினார். சுமார் பதினைந்து நிமிடம் கழித்து தான் யானைகள் தண்டவாளத்தை விட்டு நகர்ந்து சென்றது.

அதன் பின்னர் தான் மலைரெயில் அந்த இடத்திலிருந்து புறப்பட்டுச் சென்றது. இதற்கிடையே ரெயிலில் பயணம் செய்த சுற்றுலா பயணிகள் யானை நின்றதை தனது செல்போன்களில் புகைப்படம் எடுத்து கொண்டு யானைகளையும், இயற்கை அழகையும் ரசித்த வண்ணம் சென்றனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near nilgiri mountain train stopped on track for elephant


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->