பழனியில் பரபரப்பு.. முகத்தில் ரத்தம் வழிய சாலை மறியலில் ஈடுபட்ட பெண் - நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி உடுமலை நெடுஞ்சாலை பகுதியில் ரத்தத்துடன் பெண் ஒருவர் திடீரென சாலை மறியல் ஈடுபட்டுள்ளார். இதைப்பார்த்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்து சம்பவம் தொடர்பாக போலீசாருக்குத் தகவல் அளித்தனர்.

அந்த தகவல் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த பெண்ணை ஆசுவாசப்படுத்தி அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அதில், அந்த பெண் மதுரையை சேர்ந்த ரேகா என்பது தெரியவந்தது.

மேலும், அந்த பெண்ணை சிலர் முன் விரோதத்தினால் கொலை வெறி தாக்குதல் நடத்தி மற்றும் மண்டையை உடைத்து சென்றதும் தெரிய வந்தது. இதனால், அந்த பெண் கத்தியால் குத்திய நபர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதையடுத்து போலீசார் அந்தப் பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அப்பெண்ணை தாக்கி விட்டு சென்ற நபரையும் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near palani woman involved road block with blood on face


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->