மாணவியைக் கடத்தி பலாத்காரம் செய்த நபர்: போலீசார் வலைவீச்சு..! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி அருகே பொதியடிக்குப்பத்தை சேர்ந்தவர் தனுஷ். இவர் பண்ருட்டி பேருந்து நிலையம் பகுதியில் உள்ள ஒரு பூக்கடையில் வேலை செய்து வருகிறார். 

இவருக்கும், அரசடிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டது. அவர்களுக்குள் அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 

இதனால், அடிக்கடி தனுஷ், அந்த மாணவியிடம் சில ஆசைவார்த்தை கூறி பழகி வந்துள்ளார். இந்த சம்பவத்தன்று தனுஷ் ஆசையாக மாணவியிடம் பேசி மோட்டார் சைக்கிளில் தனது வீட்டுக்கு அழைத்து சென்றார். அங்கு அந்த மாணவியை அடைத்து வைத்து பாலியல் கொடுமை செய்துள்ளார். 

இது குறித்து வெளியே தெரிவித்தால், உன்னையும், உன் குடும்பத்தினரையும் கொன்று விடுவதாக மாணவியை மிரட்டியுள்ளார். ஆனால்,  மாணவி இந்த சம்பவம் குறித்து தனது தாயிடம் தெரிவித்து அழுது புலம்பினார். இது குறித்து மாணவியின் தாய் பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். 

அந்த புகார் மனுவில், தனது மகளை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த தனுசை கைது செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போலீசார் தனுஷ் மீது போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்து தேடிவருகிறார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near pandruti stdent sexually harresment case


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->