சேலம் : பல லட்ச ரூபாய் மதிப்புள்ள சொத்தை காதலிக்கு வழங்கிய முதியவர் - கதறி அழுவும் மனைவி.! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் தாலுகா பெரியவடகம்பட்டியை சேர்ந்தவர் பழனியப்பன். இவர் மனைவி பொன்னம்மாள். இவர், தன்னுடைய மகள் கமலா என்பவருடன் சேர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு பரபரப்பு புகார் மனு ஒன்றுக்கு கொடுத்துள்ளார். 

அந்த மனுவில் அவர் தெரிவித்து இருப்பதாவது:- "எனது கணவர் பழனியப்பனுக்கு தொண்ணூறு வயதாகிறது. எங்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர். மகன் உடல் நலக்குறைவால் உயிரிழந்து விட்டாார். இதற்கிடையே எனது கணவர் குப்பாயி என்பவருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தார். 

இதனை நாங்கள் கைவிடுமாறு பலமுறை கண்டித்தும் அவர் கேட்கவில்லை. தற்போது மூன்றாவதாக பழனியம்மாள் என்பவருடன் கள்ளத் தொடர்பு வைத்துள்ளார். இதையடுத்து, பழனியம்மாளுக்கு எங்களுக்கு சொந்தமான பல லட்ச ரூபாய் மதிப்பு உள்ள 6.5 ஏக்கர் நிலத்தை எனது கணவர் எழுதி வைத்துள்ளார். 

மேலும், நாங்கள் வசித்து வந்த வீட்டையும் இடித்து விட்டு எங்களை மிரட்டுகிறார். இந்த வயதில் கூலி வேலைக்கும் சென்று பிழைப்பை நடத்த முடியாமல் கடும் சிரமம்பட்டு வருகிறோம். 

ஆகவே, கணவரிடமிருந்து சொத்தை மீட்டு, எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். அப்படி இல்லை என்றால், என்னை கருணை கொலை செய்து விடுங்கள்" என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த காவல்துறைக்கு ஆட்சியர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near salem old lady pettion to collecter office


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->