சேலம் : தவறான சிகிச்சையால் கண்ணை இழந்த பட்டதாரி பெண்.! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டத்தில் உள்ள சின்னனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாணிக்கம். இவர் மனைவி சத்யா. கர்ப்பிணியான இவர் கடந்த அக்டோபர் மாதம் 31-ந் தேதி, சேலம் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இவருக்கு கடந்த நவம்பர் மாதம் 4-ந் தேதி அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது. 

அதன் பின்னர் சத்யாவிற்கு வலது கையில் நரம்பு ஊசி செலுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து அவருடைய வலது கண்ணில் வீக்கம் ஏற்பட்டது. இதையறிந்த சத்யாவின் தந்தை உள்பட சிலர், மருத்துவரை சந்தித்து, முறையாக சிகிச்சை அளிக்கவில்லை. அதனால் கண்ணில் வீக்கம் ஏற்பட்டுள்ளது என்று புகார் தெரிவித்துள்ளனர். 

மேலும் சத்யாவை டிஸ்சார்ஜ் செய்ய சொல்லி வலியுறுத்தினார்கள். ஆனால் மருத்துவர்கள் சத்யாவை டிஸ்சார்ஜ் செய்யாமல் அங்கேயே வைத்து சிகிச்சை அளித்துள்ளனர். மேலும், நவம்பர் மாதம் 12-ந் தேதி சத்யா கண் பார்வையை இழந்து விட்டதாக மருத்துவர்களே உறவினர்களிடம் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து சத்யா தனியார் மருத்துவமனையில் 22-ந் தேதி அனுமதிக்கப்பட்டார். 

அங்கு சந்தியாவிற்கு அறுவை சிகிச்சை செய்து அவரின் கண்ணை அகற்றியும் விட்டனர். இதனால் ஆத்திரமடைந்த சத்யாவின் உறவினர்கள், தவறான சிகிச்சை செய்த மருத்துவரை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும், இந்த சம்பவம் குறித்து அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரி முதல்வரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டினர். 

இது தொடர்பாக இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாட்டாண்மை கட்டிடம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றத்தைத் தொடர்ந்து மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்குள் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் அந்த பெண்ணின் உறவினர்கள் என்று சுமார் 50க்கும் மேற்பட்டோர் நுழைய முயன்றனர். 

அங்கு அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால், கட்டிடத்தின் நுழைவு வாயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டடு, தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோஷங்கள் எழுப்பினர். இதனால் அரசு மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near salem woman loss eye for wrong treatment


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->