திருட சென்ற வீட்டில் பிரியாணி சாப்பிட்டு தூங்கிய வாலிபர்.! கையும் களவுமாக பிடிபட்ட சம்பவம்.! - Seithipunal
Seithipunal


சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நடுவிக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் நேற்று வேலையாக வெளியூர் சென்றுள்ளார். இந்த நிலையில், ன்று மதியம் பூட்டியிருந்த வெங்கடேசன் வீட்டின் மேற்கூரைகள் பிரிக்கப்பட்டு இருந்தது. 

இதை பார்த்த அப்பகுதி மக்கள் சம்பவம் தொடர்பாக போலீசாருக்கும், வெங்கடேசனுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி, போலீசார் மற்றும் வெங்கடேசன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வெங்கடேசன் வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்றுள்ளனர். அங்கு, முன் அறையில் பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்துள்ளன. 

மேலும் விலை உயர்ந்த பொருட்கள் அனைத்தும் ஒரு மூட்டையாக கட்டி வைக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் வீடு முழுவதும் சோதனை செய்ததில், படுக்கையறையில் வாலிபர் ஒருவர் தூங்கி கொண்டிருந்தார். அவர் அருகே மது பாட்டில்களும், பிரியாணி சாப்பிட்ட பொட்டலங்களும் இருந்துள்ளன. 

இதையடுத்து போலீசார் அந்த வாலிபரை தட்டி எழுப்பி அவரிடம் போலீசார் கிடுக்குப்படி விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர் ராமநாதபுரம் மாவட்டம்  மேலசேத்தன் ஏந்தல் கிராமத்தை சேர்ந்த சுதந்திரதிருநாதன் என்பது தெரியவந்தது. 

இவர் பூட்டி இருக்கும் வீடுகளில் கொள்ளையடிக்கம் கொண்டவர். அந்த வகையில், அவர் நேற்று மதியம் பிரியாணி, மதுபாட்டிலுடன் வெங்கடேசனுடன் வீட்டில் ஏறி குதித்து வீட்டில் திருடிய பொருட்களை மூட்டை கட்டி வைத்துள்ளார்.

இதற்கிடையே, அவர் பிரியாணியும், மதுவும் சாப்பிட்டு விட்டு செல்லலாம் என்று நினைத்துள்ளார். அதன்படி இரண்டையும் சாப்பிட்ட விட்டு அங்கேயே சிறிது நேரம் தூங்கியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சுதந்திர திருநாதனை கைது செய்து அழைத்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near sivakangai young man arrested for steal in house


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->