திருவையாறு அருகே நேருக்கு நேர் மோதிக்கொண்ட அரசு மற்றும் தனியார் பேருந்துகள்.! - Seithipunal
Seithipunal


இன்று அரியலூரில் இருந்து தஞ்சாவூர் நோக்கி ஏராளமான பயணிகளுடன் தனியார் பேருந்து ஒன்று புறப்பட்டது. இந்த பேருந்து இன்று மதியம் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவையாறு அருகே வெள்ளச்சி மண்டபம் அருகே வந்து கொண்டிருந்தது. 

அதே சமயம், தஞ்சாவூரில் இருந்து திருவையாறு வழியாக அரசு பேருந்து ஒன்று வந்துகொண்டிருந்தது. இந்த இரண்டு பேருந்துகளும் திடீரென நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதனால் பதறிய பயணிகள் காப்பாற்றும் படி, கூச்சலிட்டனர். 

இந்த விபத்தில் இரண்டு பேருந்துகளின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. மேலும், தனியார் பேருந்தின் ஓட்டுநர் உள்பட இருபத்தைந்துக்கும் மேற்பட்ட பயணிகள் பலத்த காயமடைந்தனர். இதில் அரசு பேருந்தின் ஓட்டுநர் இடிப்பாடுக்குள் சிக்கினார். அவரை பொதுமக்கள் அனைவரும் பத்திரமாக மீட்டனர். 

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருவையாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதைத்தொடர்ந்து சிலர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.‌ இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய சம்பவத்தால் பெரிய பரபரப்பு ஏற்பட்டது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near thiruvaiyar govt and private bus accident


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->