திருச்சி : லாட்டரி சீட்டு விற்று இளைஞர்களை ஏமாற்றிய ஏழு பேர் கைது.! - Seithipunal
Seithipunal


திருச்சி மாவட்டத்தில் பல இடங்களில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாகவும், குறிப்பாக ஆன்லைனில் லாட்டரி சீட்டு விற்பனை அதிக அளவு நடைப்பெற்று வருவதாகவும் புகார்கள் அதிகமாக எழுந்துள்ளன. 

இதற்காக திருச்சி மாநகர போலீசார் மற்றும் திருச்சி சிறப்பு தனிப்படை போலீசார்கள் சோதனை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் திருச்சி பாலக்கரை மற்றும் காந்தி மார்க்கெட் பகுதியை சேர்ந்த வாலிபர்கள் இரண்டு பேர் ஆன்லைனில் லாட்டரி சீட்டு வாங்கியுள்ளனர். அவர்களுக்கு அந்த லாட்டரி சீட்டில் பணம் கிடைத்துள்ளது. 

அதன்படி, அந்த இளைஞர்கள் சம்பந்தப்பட்டவர்களிடம் பணத்தை தருமாறு கேட்ட போது அவர்கள் பணத்தை கொடுப்பதற்கு மறுத்து வந்தனர். மேலும், இரண்டு வாலிபர்களையும் மிரட்டி அவர்களிடமிருந்து ரூபாய் 5000 பணத்தை பறித்துக் கொண்டு அனுப்பியுள்ளனர். 

இது குறித்து இரண்டு இளைஞர்களும் தனித்தனியாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் படி, தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் லாட்டரி சீட் விற்பனை செய்யும் கும்பல் பிடிப்பட்டனர். 

இவர்கள் திருச்சி மாவட்டத்தில் உள்ள பாலக்கரை பகுதியில் லாட்ஜில் ஒன்றில் அறை எடுத்து தங்கி காந்தி மார்கெட் மற்றும் பாலக்கரை பகுதியில் டீக்கடை அருகில் மூன்று நபர் லாட்டரி மற்றும் ஆன்லைன் லாட்டரி தொடங்கி விற்பனை செய்தது தெரிய வந்தது. 

இதைத்தொடர்ந்து, தனிப்படை போலீசார் லாட்டரி சீட்டு விற்பனை செய்தவர்களை மடக்கிப் பிடித்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில்  புதுக்கோட்டையை சேர்ந்த சூசை என்கிற அய்யனார், இளையான்குடியை சேர்ந்த ஜெகன் மற்றும் விஷ்ணு, பள்ளிபாளையத்தை சேர்ந்த அருண் பிரசாத், கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த ஆரோக்கியசாமி, திருச்சி பிள்ளைமாநகரை சேர்ந்த மரியமெர்குலிஸ் மற்றும் ராமநாதபுரத்தை சேர்ந்த துரைமுருகன் என்பது தெரிய வந்தது. 

மேற்கண்ட ஏழு பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து எட்டு செல்போன்கள், ரூ.இருபது ஆயிரம் பணம், கார் மற்றும் இருசக்கர வாகனம் உள்ளட்டவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near trichy seven peoples arrested for lottary seat sale


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->