விழுப்புரம் || செலவிற்கு பணம் தராததால் தாயை கொன்ற மகன்.!
near vilupuram son kill mother for money
விழுப்புரம் மாவட்டம் அருகே வி.சித்தாமூர் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல். இவருக்கு திருமணமாகி நான்கு மகள்கள் உள்ளனர். அதேபகுதியில் அவரது தாய் அசோதையும் தனியாக வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால், இவர் தனது மனைவி குழந்தைகளை பிரிந்து தனியாக வசித்து பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து விற்பனை செய்து வருகிறார்.
இதையடுத்து, நேற்று இரவு சக்திவேல் தனது தாய் அசோதையின் வீட்டிற்குச் சென்று தனது செலவுக்கு பணம் கேட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல், அவருடைய ரேசன் கார்டையும் கேட்டு நச்சரித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் அசோதை வீட்டிற்கு சென்று இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
ஆனால் இன்று காலை திடீரென எழுந்த சக்திவேல் மீண்டும் அசோதையிடம் சென்று பணம் கேட்டு தகராறு செய்தார். இதனால் கோபமடைந்த சக்திவேல் தனது தாய் என்று கூட பார்க்காமல் அசோதையை கொடூரமாக தாக்கினார். இதில் அவர் கீழே விழுந்து மயக்கம் அடைந்தார். பின்னர் தனது தாய் இறந்துவிட்டதஜாக கருதி வீட்டின் பின்பக்கம் உள்ள கிணற்றில் வீசினார்.
நீண்ட நேரமாக அசோதை வீட்டில் எந்த சத்தமும் இல்லாததால் அருகிலுள்ளவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டு, தோட்டத்திற்குச் சென்று பார்த்தனர். அங்கு சக்திவேல் அழுதபடி அமர்ந்திருந்தார். அவரிடம் அக்கம்பக்கத்தினர் விசாரணை செய்த போது, தனது தாயை கொன்று விட்டதாக தெரிவித்தார்.
உடனே அவர்கள் இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். இந்த தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, கிணற்றில் வீசப்பட்ட அசோதையின் உடலை மீட்டு, அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். மேலும், போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து சக்திவேலை கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
English Summary
near vilupuram son kill mother for money