நெல்லை : காவல் நிலையத்தில் பல் பிடுங்கிய விவகாரம் - ஏஎஸ்பி பல்வீர் சிங் காத்திருப்போர் பட்டியலுக்கு மற்றம்.! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட மூன்று பேரை, காவல் அதிகாரி ஏஎஸ்பி பல்வீர் சிங் கட்டிங் பிளேடு கொண்டு பற்களை பிடுங்கி கொடுமைப்படுத்தியதாக புகார் எழுந்தது.

அதுமட்டுமல்லாமல், இந்த சம்பவம் தொடர்பாக சமூகவலைத்தளங்களில் வீடியோவும் வெளியாகி பொதுமக்களிடையே பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இந்த நிலையில், கொடூர காவல் அதிகாரி ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் எழுந்தது.

இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து இன்று முதல் விசாரணை நடத்தப்படும் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன் படி, விசாரணை அதிகாரியாக உதவி ஆட்சியர் முகமது சபீர் ஆலம் நியமிக்கப்பட்டு, அவர் இன்றுமுதல் தனது விசாரணையை தொடங்கியுள்ளார்.

இந்த நிலையில், விசாரணைக்காக அழைத்து சென்று பல் பிடுங்கிய விவகாரத்தில் ஏஎஸ்பி பல்வீர் சிங் மற்றும் கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தின் இன்ஸ்பெக்டர் மற்றும் சப் இன்ஸ்பெக்டர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த தகவலை தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

nellai teeth pulling issue ASP balveer singh change to waiting list


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->