வட மாநில தொழிலாளர்களை பாதுகாக்க புதிய குழு.. திருப்பூரில் துவக்கம்..!!
New committee launched to protect northstate workers in Tirupur
திருப்பூர் மாவட்டத்தில் அதிக அளவில் வட மாநில தொழிலாளர்கள் வேலை செய்து வரும் நிலையில் சமூக வலைதளங்களில் வட மாநிலத் தொழிலாளர்கள் குறித்தான தவறான மற்றும் தேவையற்ற வதந்திகள் பகிர்வது அதிகரித்து காணப்படுகிறது.
தமிழக தொழிலாளர்களுடன் வடமாநிலத்தவர்கள் மோதுவது போன்ற பதிவுகள் மற்றும் வேறு இடங்களில் நடந்த நிகழ்வுகளை திருப்பூரில் நடந்தது போன்று சித்தரித்து வதந்திகள் பரப்பப்படுகிறது.
இந்த நிலையில் இது போன்ற வதநதிகள் பரப்புவது குறித்து மாவட்ட ஆட்சியர் வினீத் மற்றும் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சஷாங் சாய் மற்றும் திருப்பூர் மாநகர் காவல்துறை ஆணையர் அபிஷேக் குப்தா பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இது ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் புலம் பெயர் தொழிலாளர்கள் குறை களைவு குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தக் குழுவினரிடம் வட மாநிலத் தொழிலாளர்கள் தங்கள் பிரச்சனை குறித்து புகார் தெரிவித்து தீர்வு காணலாம்.
மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் பேரிடர் மேலாண்மை பிரிவில் 1077 என்ற இலவச அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தங்கள் குறைகளை தெரிவிக்கலாம்.
அதேபோன்று திருப்பூர் மாநகர காவல் அலுவலகத்தை 0421-2203313, 94981-01300, மற்றும் மாவட்ட காவல் ஆணையர் அலுவலகத்தை 0421-297017, 94981-01320 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். வட மாநில தொழிலாளர்களுக்காக இந்தி பேசக்கூடிய பிரதிநிதிகள் பணியாற்றப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
New committee launched to protect northstate workers in Tirupur