ரூ.195 கோடியில் புதிய மேம்பாலம் - எங்குத் தெரியுமா? - Seithipunal
Seithipunal


ரூ.195 கோடியில் புதிய மேம்பாலம் - எங்குத் தெரியுமா?

சென்னையில் அதிகளவில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சந்திப்புகளில் ஒன்று வள்ளுவர் கோட்டம் சந்திப்பு. ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்தச் சந்திப்பை தினமும் கடந்து செல்கிறது. 

இதனால், இந்த சந்திப்பில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க ரூ.98 கோடி மதிப்பீட்டில் புதிய மேம்பாலம் அமைக்கப்படும் என்று சட்டப் பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு அறிவித்தார்.

அந்த அறிவிப்பின் படி, சென்னை, வள்ளுவர் கோட்டம் சந்திப்பில் பாம்குரோவ் ஹோட்டல் முதல் கோடம்பாக்கம் நெடுஞ்சாலை வரை சுமார் 570 மீ நீளத்துக்கு புதிய மேம்பாலம் கட்டப்படவுள்ளது. இந்த மேம்பாலம் வடபழனி, கோயம்பேடு மேம்பாலம் உள்ளிட்ட நான்கு வழிகள் கொண்ட மேம்பாலமாக அமைய உள்ளது. 

அதிலும் குறிப்பாக வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலையில் இருந்து வரும் வாகனங்கள் நேரடியாக உத்தமர் காந்தி சாலைக்கு சென்று சேரும் வகையில் இந்த மேம்பாலம் அமைக்கப்படவுள்ளது. இந்த நிலையில், வள்ளுவர் கோட்டம் சந்திப்பில் மேம்பாலத்திற்கான நில எடுப்பு மற்றும் கட்டுமான பணிகளுக்காக ரூ.195 கோடிக்கு நிர்வாக அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. 

அந்த அரசாணையின் படி, மேம்பால கட்டுமான பணிகளுக்கு ரூ.67.16 கோடியும், நில எடுப்பு பணிகளுக்கு ரூ.113.19 கோடியும், ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது மேம்பாலத்தின் கட்டுமானப்பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால், விரைவில் நில எடுப்பு பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

New flyover on chennai valluvar kottam


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->