நிச்சயதார்தத்தைக் கொண்டாட சென்ற குடும்பத்தினர் - கடற்கரையில் புதுமாப்பிள்ளைக்கு காத்திருந்த அதிர்ச்சி.!
new groom died in tharangambadi beach
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் வீரபத்திரர்கோவில் தெருவை சேர்ந்தவர் மூர்த்தி மகன் நவீன்குமார் என்பவருக்கும், கும்பகோணம் செக்கடித்தெருவை சேர்ந்த நிவேதாவுக்கும் நேற்று முன்தினம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.
இந்த மகிழ்ச்சியான தருணத்தைக் கொண்டாட நேற்று காலை இருவீட்டாரின் உறவினர்கள் 25பேர் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடிக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அங்கு மத்திய வேளையில் அனைவரும் தரங்கம்பாடி கடலில் குளித்துக் கொண்டிருந்தபோது நவீன்குமார், நிவேதா மற்றும் சரவணன் என்ற சிறுவன் உள்ளிட்டோர் பெரிய அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர்.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் கடலில் இறங்கி உயிருக்குப் போராடியவர்களை மீட்டனர். அவர்களில் நிவேதா மட்டும் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டார். நவீன்குமார் மற்றும் சரவணன் உள்ளிட்ட இருவரும் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார் இருவரது உடல்களையும் மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும், உயிருக்கு ஆபத்தான நிலையில் நிவேதா நாகப்பட்டினம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
பின்னர் போலீஸார் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமண நிச்சயதார்த்தம் நடந்து ஒருநாள் திரும்புவதற்குள் புதுமாப்பிள்ளை மற்றும் 6 ம் வகுப்பு படித்து வந்த மாணவன் சரவணனும் இறந்தது கும்பகோணம் பகுதியில் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
new groom died in tharangambadi beach