அரசு மருத்துவமனை கேண்டின்களுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.! - Seithipunal
Seithipunal


சென்னை ராயபுரத்தில் அமைந்துள்ள ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் இரண்டு நாட்களுக்கு முன்பு கண்ணாடி ரேக்குகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த தின்பண்டங்கள் மீது எலி ஒன்று ஓடியதோடு வடை, பஜ்ஜி போன்றவற்றை சாப்பிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் பாலாஜி குறிப்பிட்ட அந்த கேண்டினை இழுத்து மூடுமாறு உத்தரவிட்டார். 

இதனை அடுத்து அந்த கேண்டீனுக்கு சீல் வைக்கப்பட்ட நிலையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மருத்துவமனை முதல்வர் பாலாஜிக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டுள்ளனர். இந்த நிலையில் அரசு மருத்துவமனை கேண்டீன்களுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது உணவு பாதுகாப்பு துறை.

அதன்படி கேண்டின்கள் தொடர்ந்து முறையாக சுத்தம் செய்ய வேண்டும், கிருமி நாசினி தெளிக்க வேண்டும், உணவுகளுக்கு அருகே உள்ள துளைகள், சாக்கடை, கால்வாய்கள் போன்றவற்றை முழுமையாக மூட வேண்டும்.

பறவைகள், செல்ல பிராணிகள் உணவு நிலையங்கள் வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்க கூடாது. அடைக்கப்பட்ட உணவு பொருட்கள் காலாவதி காலத்திற்குள் இருந்தால் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் உள்ளிட்ட புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசு உணவு பாதுகாப்பு துறை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

new guidelines released for govt hospital canteens


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->