பெரம்பலூர் : உயிருக்கு பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த காதல் ஜோடி.!
new married couple took refuge police station in perambalur
பெரம்பலூர் : உயிருக்கு பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த காதல் ஜோடி.!
கடலூர் மாவட்டத்தில் உள்ள, விருத்தாசலம் அருகே மங்கலம்பேட்டை தெற்கு தெருவை சேர்ந்தவர் ரமேஷின் மூன்றாவது மகன் நமச்சிவாயம். பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள இவர் கோவில் ஸ்தபதியாக பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நமச்சிவாயம் தனது வீட்டிற்கு எதிர் வீட்டில் வசித்து வந்த மருதைமுத்து என்பவரின் மகள் அனிதாவை கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், அனிதாவின் பெற்றோர் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார்.
இதனால், நமச்சிவாயமும், அனிதாவும் நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியேறி நேற்று காலை பெரம்பலூருக்கு வந்து சமூக செயல்பாட்டாளர் சத்யபிரபு உள்ளிட்ட அவரது நண்பர்கள் முன்னிலையில் தண்ணீர்பந்தலில் உள்ள கரடி முனீஸ்வரர் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்.
அதன் பின்னர் இருவரும் உயிருக்கு பாதுகாப்பு கேட்டு பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு சென்று தஞ்சமடைந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்திய போலீஸார் இருவரின் பெற்றோர்களை காவல் நிலையத்திற்கு வருமாறு தகவல் தெரிவித்தனர்.
ஆனால் அவர்கள் யாரும் வரவில்லை. இதற்கு முன்னதாகவே அனிதாவின் பெற்றோர் அங்குள்ள காவல் நிலையத்தில் மகளைக் காணவில்லை என்று புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் போலீஸார், பெரம்பலூர் சென்று அனிதாவிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது, அனிதா என்னை யாரும் கடத்தவில்லை. நான் காதலித்து விருப்பத்துடன் தான் நமச்சிவாயத்தை திருமணம் செய்து கொண்டேன். நான் எனது கணவருடன் செல்கிறேன் என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீசார் இருவரையும் அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
new married couple took refuge police station in perambalur