நடுக்கடலில் புதிய பாம்பன் ரயில் பாலம்!....தூக்குப் பாலத்துடன் இன்று அதிவேக ரயில் சோதனை! - Seithipunal
Seithipunal


ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பாம்பன் நடுக்கடலில் ரூ.545 கோடியில் சுமார் 2 கி.மீ. அளவிற்கு  புதியதாக ரயில் பாலம் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. அந்த வகையில்,  பாலத்தின் மையப்பகுதியில் கப்பல்கள் கடந்து செல்வதற்கு வசதியாக 77 மீட்டர் நீளமும், 650 டன் எடை கொண்ட செங்குத்து வடிவிலான மேல்நோக்கி திறந்து மூடும் வகையில் தூக்குப் பாலம் அமைக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையே, இந்த புதிய பாலத்தில் 3 முறை சரக்கு ரயில்களை இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்பட்ட நிலையில், தூக்குப் பாலத்தை திறந்து மூடி பல்வேறு கட்ட சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்று மண்டபம் ரயில் நிலையத்தில் இருந்து பாம்பன் புதிய ரயில் பாலம் மற்றும் ராமேசுவரம் வரை அதிவேகமான 80 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில் இயக்கப்பட்டு சோதனை செய்யப்படுகிறது. அப்போது, தூக்குப்பாலம் திறக்கப்பட்டும் ஆய்வு நடைபெற உள்ளது.

சோதனை ஓட்டத்தின் ஆய்வறிக்கை ரயில்வே துறையிடம் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு, பாம்பன் ரயில் பாலத்தின் திறப்பு விழா தேதி உறுதி செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

New pampan rail bridge in the middle sea high speed train test today with suspension bridge


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->