சென்னை முழுவதும் நிறுத்தப்பட்ட சாலை அமைக்கும் பணிகள்! இது தான் காரணமா? - Seithipunal
Seithipunal


சென்னையில் ஜனவரி மாதம் வரை புதிய சாலைகள் அமைக்கப்படாது - சென்னை மாநகராட்சி! 

வடகிழக்கு பரும பருவமழையானது அக்டோபர் மாதம் இறுதிக்குள் பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதால் வடிகால் பணிகளை அக்டோபர் 20ஆம் தேதிக்குள் முடித்துக் கொள்ள வேண்டும் என சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. பணிகள் முழுமை அடையாத இடங்களில் மழைநீர் தேங்காதவாறு முன்னெச்சரிக்கை பணி மற்றும் மின்மோட்டார்கள் தயார் நிலையில் வைத்துக் கொள்ள மாநகராட்சி தயாராகி வருகிறது. 

பருவமழை துவங்க இருப்பதை அடுத்து புதிய சாலை மற்றும் சாலை சீரமைக்கும் பணிகளை நிறுத்துவதாக மாநகராட்சி அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி கூறியதாவது, " சென்னையில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணி, மின்சார வாரியம் சார்பில் புதைவட கேபிள் அமைக்கும்பணி, குடிநீர் வாரிய பணிகள் முடிவடைய இன்னும் இரண்டு மாதங்கள் தேவைப்படும்.

ஆனால்பருவமழைக்கும் முன் பணிகளை நிறுத்தி முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்பொழுது சாலை சீரமைத்தால் மீண்டும் சேதம் ஏற்படும் என்பதால் பொது போக்குவரத்துக்கு சிரமம் ஏற்படாதவாறு சாலை அமைக்கும் பணி தற்போது நடந்து வருகிறது.

அந்த பணிகளையும் அக்டோபர் 10ஆம் தேதிக்குள் முடித்துக் கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. இது தவிர மற்ற பணிகளால் சேதம் அடைந்த சாலைகள் பகுதி சீரமைப்பு அடிப்படையில் "பேட்ச் ஒர்க்" பணி மட்டுமே மேற்கொள்ளப்படும். அதே நேரம் இந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரை சாலை சீரமைக்க ஒப்பம் கோறும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது" என தெரிவித்தனர். 

சென்னை மாநகராட்சி பொருத்தவரை பேருந்து சாலை 387 கிமீ, உட்புற சாலை 5270 கி.மீ பராமரிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு பெய்த அதிக கனமழையால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாலைகள் சேதமடைந்துள்ளது. இந்த சாலைகளை சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

New roads will not be constructed in Chennai till January by Chennai Corporation


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->