சீமானுக்கு அடுத்த அடி.. முக்கிய பொறுப்பாளர் கட்சியில் இருந்து விலகல்!
Next step for Seeman. Key in-charge resigns from party
நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் கோ.தமிழரசன் அக்கட்சியில் இருந்து விலகியுள்ளார்.கட்சியை விட்டு விலகிய கோ. தமிழரசன் சீமான் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.
தமிழகத்தில் சமீபகாலமாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது அதிருப்தி அடைந்த நிர்வாகிகள் பலர் அக்கட்சியில் இருந்து விலகி மாற்றுக்கட்சியில் இணைந்து வருவது தொடர்கதையாகி வருகிறது.
இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் கோ.தமிழரசன் அக்கட்சியில் இருந்து தீடீரென விலகியுள்ளார்.மேலும் கட்சியை விட்டு விலகிய கோ. தமிழரசன் சீமான் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். அவர் கூறியதாவது:-
சமீப காலமாக சீமானின் பேச்சும் செயலும் தமிழ் தேசிய கருத்துகளுக்கு முரணாக உள்ளது என்றும் பிழையான தத்துவத்தை நோக்கி பயணப்படும் சீமான், பா.ஜ.க.விடம் நாம் தமிழர் கட்சி தொண்டர்களை விற்றுவிடுவார் போல் தோன்றுகிறது என கூறியுள்ளார்.
மேலும் ஜாதி பெருமை பேசுவோரை கண்டிக்காமல் ஜாதி வெறியை சீமான் தூண்டுகிறார் என்றும் அழிவுப்பாதையை நோக்கி நாம் தமிழர் கட்சியை சீமான் நடத்திக்கொண்டிருக்கிறார் கூறிய கோ.தமிழரசன்,
பா.ஜ.க. மனிதகுலத்தின் எதிரி என சொல்லிவிட்டு தற்போது அக்கட்சியின் தலைவர்களை சீமான் புகழ்ந்து பேசுவது முரணாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழரசன் கட்சி தொடங்கிய ஆரம்ப காலம் முதல் நாம் தமிழர் கட்சியுடைய மாநில கொள்கை பரப்புச் செயலாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Next step for Seeman. Key in-charge resigns from party