புரட்சியாளர்களாக மாற வாடகை வீட்டில் துப்பாக்கி தயாரித்த இளைஞர்கள்! வாடகை இருந்த வீட்டில் என்ஐஏ சோதனை! - Seithipunal
Seithipunal


பிரபாகரன், வீரப்பன் வழியில் புரட்சியாளர்களாக மாற முயற்சி!

சேலம் மாவட்டம் அடுத்த ஓமலூர் அருகே கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு போலீசார் மேற்கொண்ட வாகன சோதனையில் துப்பாக்கி கத்தி முகமூடி உள்ளிட்ட பொருட்களுடன் வந்த இரண்டு வாலிபர்களை கைது செய்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் சேலம் மாநகரைச் சேர்ந்த நவீன் சக்கரவர்த்தி, சஞ்சய் பிரகாஷ் என்பது தெரியவந்தது இருவரும் சேலம் செட்டிச்சாவடி பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து யூட்டியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்தது தெரியவந்தது.

அவர்களிடம் இருந்து துப்பாக்கி செய்வதற்கான உபகரணங்கள் கத்தி முகமூடி சில துப்பாக்கிகள் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். பின்னர் இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது. அவர்கள் மேற்கொண்ட விசாரணையில் இயற்கை வளங்களை அழிக்கும் விதமாக சேலம் மாவட்ட ஊத்துமலை அருகில் கல்குவாரி செயல்பட்டு வருகிறது. அதற்காக செல்லும் லாரிகளுக்கு குண்டு வைப்பதற்கு திட்டம் தீட்டியதை ஒப்புக் கொண்டுள்ளனர். 

இருவரும் புரட்சியாளர்களாக மாறும் நோக்கில் துப்பாக்கி தயாரிக்கவும் சாமானிய மனிதன் முதல் நீதிபதிகள் வரை தவறுகள் நடந்தால், மனித மாண்புகளையும் இயற்கை மற்றும் அனைத்து உயிரினங்களையும் காப்பதற்கு இருவரும் சேர்ந்ததாக தெரிவித்துள்ளனர். 

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் மற்றும் சந்தன கடத்தல் வீரப்பன் ஆகியோர் வழியில் சாமானிய மக்களை காக்கும் நோக்கில் புரட்சியாளர்களாக மாற துப்பாக்கிகளை தயாரித்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர். இவர்களுக்கு உதவியாக இருந்த கிச்சிபாளையம் பகுதியை சேர்ந்த கபிலன் என்ற வாலிபரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். 

இந்நிலையில் இன்று காலை 6 மணி முதல் தேசிய புலனாய்வு அமைப்பின் சென்னை பிரிவு டிஎஸ்பி செந்தில்குமார் தலைமையில் ஆறு பேர் கொண்ட குழு அவர்கள் தங்கி இருந்த வீட்டில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NIA again searching in rental house


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->