நா.த.க சாட்டை துரைமுருகன் தொடர்புடைய இடங்களில் NIA சோதனை.!!
Nia raid in ntk sattai duraimurugan related places
தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, நெல்லை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் சாட்டை துரைமுருகன், நெல்லை மதிவாணன் மற்றும் யூடியூபர் தென்னகம் விஷ்ணு தொடர்புடைய இடங்களில் 50க்கும் மேற்பட்ட என்ஐஏ அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் சோதனை செய்து வருகின்றனர்.
அயல்நாடுகளில் தடை செய்யப்பட்ட அமைப்பினரை இந்தியாவுக்குள் ஊடுருவ உதவி செய்தனரா? என்ற சந்தேகத்தின் பேரில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
English Summary
Nia raid in ntk sattai duraimurugan related places