ஜனவரி 4 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


ஹெத்தையம்மன் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி மாதம், 4 ஆம் தேதி நீலகிரி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் படகர் இன மக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். இந்த மக்களால் சிறப்பாக கொண்டாடப்படும் ஹெத்தையம்மன் கோவில் திருவிழா ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 4 ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்த கோவில் விழாவை முன்னிட்டு வரும் ஜனவரி 4 ஆம் தேதி நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக, நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் அறிவித்துள்ளார்.

மேலும், இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில், வரும் ஜனவரி 21 ஆம்தேதி மாவட்டத்தில் வேலை நாளாக இருக்கும் என்றும், மாவட்ட ஆட்சியர் அம்ரித் தெரிவித்துள்ளார்.


மேலும் ஒரு அண்மை செய்தி : தமிழக அரசு சார்பில் ஓடிடி ஆப் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

புதிய தொழில்நுட்பங்களான ஹெச்.டி. செட்டாப் பாக்ஸ்களை வழங்குவது, "TACTV OTT APP" உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கேபிள் நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் இதுகுறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nilgiri local holyday 2023


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->