நீலகிரி மாவட்டம்! வேன் கவிழ்ந்த விபத்தில் 5 பேர் காயம்.! - Seithipunal
Seithipunal


நீலகிரி மாவட்டத்தில் வேன் கவிழ்ந்த விபத்தில் 5 பேர் காயமடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மேட்டுப்பாளையம் சாலையில் வேன் சென்று கொண்டிருக்கும்போது கட்டபள்ளம் பகுதியில் திடீரென்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் வேனில் இருந்த ஆந்திரா மாநிலம் கடப்பா பகுதியை சேர்ந்த 5 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு காயமடைந்த 5 பேரை கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nilgiri van accident five persons injured


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->