இந்து பக்தர்களை அவமதித்து ஆடுவெட்டுவது தான் உரிமைப்போரட்டமா? நடிகை கஸ்தூரி கேள்வி! - Seithipunal
Seithipunal



நடிகை கஸ்தூரி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "முஸ்லிம்களுக்கு திருப்பரங்குன்றம் மலையில் தனி உரிமை இல்லை. பிரச்சினை செய்பவர்கள் அனைத்து இஸ்லாமியருக்கும் பிரதிநிதியா? 

இதுவரை நிலவி வந்த மத நல்லிணக்கத்துக்கு காரணம் இந்துக்களின் பெருந்தன்மையே. அதை மதிக்காமல் பிரச்சினை வளர்ப்பதன் உள்நோக்கம் என்ன?

சிக்கந்தர் பாதுஷா ஒரு நல்ல மன்னன் எல்லாம் இல்லை.  தமிழுக்கும் தமிழருக்கும் எதிரானவன். மதமாற்ற கொள்கையை தீவிரமாக செயல்படுத்திய கொடுங்கோல் வரி சுல்தான். விஜயநகரப் படையிடம் தோற்று  திருப்பரங்குன்றம் மலை குகையில் பதுங்கியிருந்த அவனை திரு பாண்டியனின் வீரர்கள் கொன்றார்கள் என்பதுதான் History.

அவனுக்கு தர்கா கட்டியது அவன் உறவினர் மற்றும் madurai sultanate இன் எஞ்சிய விசுவாசிகள். பொதுமக்கள் அல்லவே அல்ல. இன்று அங்கு வழிபடுவர் ஒன்று சுல்தான்கள் குடியேற்றிய உருது முஸ்லிமாக இருப்பர். இல்லை மதமாற்றம் செய்யப்பட்டவர்களின் வம்சாவழியினராக இருப்பர். 

சொல்லப்போனால் தர்கா வழிபாட்டை இஸ்லாம் அனுமதிப்பதில்லை. இறந்தவர்களை கும்பிடுவது இந்துக்கள் வழக்கம். தர்க்காவில் வழிப்படுபவர்கள் முஸ்லிமாக ஏற்கப்பட மாட்டார்.

ஒரு காலத்தில் இந்து தமிழ் பாண்டியக்குலமாக இருந்தவர்கள்  வரலாற்றை உணர்ந்து தாய் மதத்திற்கு மாறலாம். 

6ஆம் நூற்றாண்டில் கட்டிய தமிழ்க்கோயில்... சனாதன சிறப்பு பெற்ற மலையில் அந்நிய அடக்குமுறை மன்னனை போற்றும் வகையில் இத்தனை நாள் வழிப்பட்டதே பிழையல்லவா? அந்த பிழை எப்படி உரிமையாகும்? 

அதையும் பெருந்தன்மையோடு அனுமதித்த இந்து பக்தர்களை அவமதித்து ஆடுவெட்டுவது தான் உரிமைப்போரட்டமா?" என்று நடிகை கஸ்தூரி கேள்வி எழுப்பியுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tirupparankundram issue Actress kasturi condemn


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->