#BigBreaking || நீலகிரி ஹெலிகாப்டர் விபத்தில் சற்றுமுன் வெளியான பெரும் அதிர்ச்சி செய்தி.! முக்கிய புள்ளி கவலைக்கிடம்.!  - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து முப்படையின் தளபதி பிபின் ராவத் பயணம் செய்த இராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி இருப்பது நாட்டையே பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டதில் 7 பேர் பலியாகியுள்ளனர். 

முப்படையின் தளபதி பிபின் ராவத் பயணம் செய்துள்ள இந்த ராணுவ ஹெலிகாப்டரில் 14 பேர் பயணம் செய்து உள்ளதாகவும், வானிலை சரியில்லாத காரணத்தினால் ஹெலிகாப்டரை திருப்பி விடப்பட்ட தாகவும் செய்தி வெளியாகி உள்ளது.

மேலும் இந்த விபத்தில் தற்போது வரை 7 பேர் உடல் கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட உள்ளதாகவும், மூன்று பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்தி வெளியாகி உள்ளது.

மேலும் முப்படைத் தளபதி பிபின் ராவத் அவர்களின் மனைவி உயிர் இழந்துள்ளதாக பெரும் அதிர்ச்சி தகவல் சற்றுமுன் வெளியாகியுள்ளது.

மேலும், முப்படைத் தளபதி பிபின் ராவத் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சி பெற்று வருவதாகவும் அதிர்ச்சி தகவல் சற்றுமுன் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nilgiris army helicopter crash


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->