திருப்பத்தூர் || கல்லூரி மாணவிக்கு கத்திக்குத்து - 9-ம் வகுப்பு மாணவன் வெறிச்செயல்.! - Seithipunal
Seithipunal


திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகே பரதேசிப்பட்டியில் வீட்டில் இருந்த கல்லூரி மாணவியை அதே பகுதியைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவன் கத்தியால் குத்தியுள்ளார்.

இதனை பார்த்து ஓடி வந்த மாணவியின் பாட்டி தடுக்க முயநின்றுள்ளார். ஆனால், அவரையும் சிறுவன் தாக்கிவிட்டு தப்பி ஓடியுள்ளான். இதனால், மாணவியின் பாட்டிக்கும் காதில் வெட்டு காயம் ஏற்பட்டுள்ளது. 

இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் படுகாயமடைந்த மாணவி மற்றும் பாட்டியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதல்கட்ட விசாரணையில், ஒரு வாரத்திற்கு முன்பு மாணவி வீட்டில் சிறுவன் செல்போன் திருட முயற்சி செய்ததும், அதனை கண்டித்ததால் ஆத்திரத்தில் இந்த தாக்குதலை நடத்தியதும் தெரியவந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nineth class student attack college student in tirupathur


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->