சமாதியில் மகிழ்ச்சியாக உள்ளேன்.. நித்தியானந்தா வெளியிட்ட தகவல்.!!
nithyananda post for health condition
சர்ச்சைகளுக்கு பெயர் போன தமிழகத்தை சேர்ந்த நித்யானந்தா, பாலியல் வன்கொடுமையால், ஆட்கடத்தல், மோசடி என்று இந்தியாவில் பல மாநிலங்களில் வழக்குகளில் சிக்கி கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்க தனது சீடர்களுடன் தலைமறைவாகியுள்ளார்.
கோவில் கட்ட நிதி என்று கூறி தன்னை நம்பிவந்தவர்களிடம் மோசடி செய்தும், அந்த பணத்தில் தனித் தீவு ஒன்று குத்தகை எடுத்து கைலாசா என்ற நாட்டை அறிவித்தார். இந்தியாவில் இருந்து தற்போது கைலாச நாட்டில் இருக்கும் நித்தியானந்தாவிற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
கடற்காற்று, இந்திய உணவு முறைகள் கிடைக்காததால் நித்தியானந்தா தொடர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உள்ளார். உடல் மெலிந்து சோர்வான நித்யானந்தருக்கு, கல்லீரல் அலர்ஜியும், சிறுநீரக கோளாறு ஏற்பட்டு உள்ளது. தற்போது நுரையீரல் தொற்று வரை சென்று மூச்சு விட முடியாமல் ஆக்சிஜன் உதவியுடன் இருந்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று நித்தியானந்த வெளியிட்டுள்ள பதிவில், பரமசிவனின் ஆசிகள், அன்புள்ள பக்தர்கள் மற்றும் அன்பான சீடர்கள், கைலாசாவாசிகள் நான் தற்போது வரை ஆழ்ந்த சமாதி நிலையை மகிழ்ச்சியாக அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்.
மேலும் உங்கள் அனைவரையும் உள் இடத்தில் இணைகிறேன். மிக விரைவில் உடலில் குடியேறி வழக்கமான சத்சங்கங்கங்களை மேற்கொள்வேன். மேலும் உயர்ந்த கொள்கைகள் மற்றும் மகா கைலாசாவின் அசாதரணமான ஆற்றலைப் பகிர்ந்து கொள்வேன் என தெரிவித்துள்ளார்.
English Summary
nithyananda post for health condition