நேரம் குறித்த நித்யானந்தா.. வெளியான அறிவிப்பு.!!
nithyananda today live
சர்ச்சைகளுக்கு பெயர் போன தமிழகத்தை சேர்ந்த நித்யானந்தா, பாலியல் வன்கொடுமையால், ஆட்கடத்தல், மோசடி என்று இந்தியாவில் பல மாநிலங்களில் வழக்குகளில் சிக்கி கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்க தனது சீடர்களுடன் தலைமறைவாகியுள்ளார்.
கோவில் கட்ட நிதி என்று கூறி தன்னை நம்பிவந்தவர்களிடம் மோசடி செய்தும், அந்த பணத்தில் தனித் தீவு ஒன்று குத்தகை எடுத்து கைலாசா என்ற நாட்டை அறிவித்தார். இந்தியாவில் இருந்து தற்போது கைலாச நாட்டில் இருக்கும் நித்தியானந்தாவிற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
சாமியார் நித்தியானந்தா மூன்று மாத இடைவெளிக்கு பிறகு கடந்த 13ஆம் தேதி மீண்டும் நேரலையில் தோன்றிய பக்தர்களுக்கு காட்சியளித்தார். அப்போது 3 மாதங்களாக தான் சமாதி நிலையில் இருந்து பற்றி பக்தர்களுக்கு விளக்கினார்.
இந்நிலையில், இன்று இரவு 8 மணிக்கு மீண்டும் நித்யானந்தா நேரலையில் தோன்றிய அருளாசி வழங்க இருப்பதாக அவரது அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.