#BREAKING || சோதனைக்கு மேல் சோதனை.. முதல்வர் ஸ்டாலினுக்கு வந்த செய்தியால் அதிர்ச்சி.!! - Seithipunal
Seithipunal


திருவாரூர் அருகே காட்டூரில் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் ரூ.12 கோடியில் 7,000 சதுரஅடி பரப்பில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கோட்டம் திறப்பு விழா இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவுக்கு முதல்வர் ஸ்டாலின் தலைமை வகிக்க கலைஞர் கோட்டத்தை பீகார் முதல்வர் நிதிஷ்குமார் திறந்து வைக்க இருந்தார்.

அதேபோல் முத்துவேலர் நூலகத்தை பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவும் திறந்து வைக்க இருந்தார். இந்த விழாவில் பங்கேற்பதற்காக சிறப்பு விமானம் மூலம் திருச்சி வரும் நிதிஷ்குமார், தேஜஸ்வி யாதவ் ஆகியோர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவாரூர் வந்து அங்கிருந்து கார் மூலம் காட்டூர் வந்து விழாவில் பங்கேற்க திட்டமிட்டு இருந்தனர்.

இந்த நிலையில் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் தமிழக பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. திருவாரூர் காட்டூரில் அமைந்துள்ள கலைஞர் கோட்டத்தை இன்று பீகார் முதல்வர் நிதிஷ்குமார் திறந்து வைத்த இறந்த நிலையில் திடீர் உடல்நலக் குறைவால் கலைஞர் கோட்ட திறப்பு விழாவில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் பங்கேற்கவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் மட்டும் சென்னைக்கு புறப்பட்டு உள்ளார்

கடந்த ஒரு மாதமாக இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை திமுக தரப்பு செய்து வந்த நிலையில் தற்போது திடீரென நிதிஷ்குமாருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று கருணாநிதியின் பிறந்த நாளுக்கு முந்தைய நாள் ஒடிசாவில் ஏற்பட்ட ரயில் விபத்து காரணமாக கருணாநிதியின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டது. கருணாநிதியின் நூற்றாண்டு விழா தொடக்கத்தில் இருந்து திமுகவினருக்கு சோதனை மேல் சோதனை ஏற்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nitishkumar trip to tamilnadu was suddenly cancelled


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->