முருங்கையால் அடித்த வடமாநில இளைஞரை அடித்தே கொன்ற 8 பேர்.!
North Indian Men attacked By Chennai peoples
சென்னை அருகே வேளச்சேரி பகுதியில் விஜிபி செல்வா நகரைச் சேர்ந்த ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ரமேஷ் மண்டல் (வயது 29), கட்டிட வேலை செய்து வருகின்றார். இவர் கடந்த பிப்ரவரி 27 -ஆம் தேதி அதே பகுதியில் இருக்கின்ற காய்கறியின் கடைக்கு சக வடமாநில தொழிலாளர்களுடன் சென்று காய்கறி வாங்கி கொண்டு பின், மீண்டும் வீடு திரும்பி கொண்டு இருந்தார்.
அப்பொழுது, தரமணியைச் சேர்ந்த கோகுல கிருஷ்ணன் (வயது 21) என்பவரும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கின்ற மாணவர்கள் சிலரும் மொத்தமாக 9 பேர் சாலையில் நடனமாடினார்கள்.
அப்பொழுது, அவர்களது கால் ரமேஷ் மண்டல் மீது தெரியாமல் பட்டிருக்கின்றது. இதன் காரணமாக, ஆத்திரமடைந்த ரமேஷ் மண்டல் தனது பையில் இருக்கின்ற முருங்கை காயால் அடித்து இருக்கின்றார். இதன் காரணமாக ஆத்திரமடைந்த நடனக்காரர்கள் அருகில் கிடந்த கட்டையை எடுத்து வந்து சுரேஷ் மண்டலின் தலையில் தாக்கி இருக்கின்றார்.
இதில், தலையில் சுரேஷ் மண்டலுக்கு பலத்த காயமடைந்தது. இதன் காரணமாக மயங்கி அவர் கீழே விழுந்த நிலையில், இதனை தொடர்ந்து, அவர்கள் 9 பேரும் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். இது பற்றி தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துவிட்டு, கோகுலகிருஷ்ணன், ஹரிகரன் மற்றும் 7 சிறுவர்கள் உட்பட 9 பேரையும் கைது செய்தனர். மேலும், சிகிச்சை பெற்று வந்த ரமேஷ் மண்டல் பரிதாபமாக உயிரிழந்தார்.
English Summary
North Indian Men attacked By Chennai peoples