சாப்ட்வேர் என்ஜினீயரிடம் கைவரிசை காட்டிய வடமாநில கும்பல்: சைபர் கிரைம் போலீசார் வலைவீச்சு! - Seithipunal
Seithipunal


சேலம், ஓமலூர் பகுதியைச் சேர்ந்த 20 வயதான சாப்ட்வேர் இன்ஜினியர் பெங்களூருவில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். 

கடந்த செப்டம்பர் மாதம் 23ஆம் தேதி ஒரு செல்போனுக்கு அழைப்பு வந்தது. அதில், தடை செய்யப்பட்ட மருந்து பொருட்களை மும்பையில் இருந்து தாய்லாந்துக்கு நீங்கள் அனுப்பி உள்ளீர்கள் என தெரிவித்துள்ளனர். 

அதற்கு சாஃப்ட்வேர் இன்ஜினியர் நான் எந்த பார்சலும் அனுப்பவில்லை என தெரிவித்துள்ளார். அதற்க்கு மறுமுனையில், நாங்கள் சைபர் கிரைம் போலீஸ் அதிகாரி உங்கள் பெயரில் தான் பார்சல் சென்றுள்ளது இந்த வழக்கில் இருந்து நீங்கள் விடுவிக்க வேண்டும் என்றால் ரூ. 27 லட்சம் தர வேண்டும் என மிரட்டி உள்ளனர். 

இதனால் பயந்து போன என்ஜினியர் 3 தவணைகளாக அந்த நபர் தெரிவித்த வங்கி கணக்கிற்கு 8லட்சத்து 29 ஆயிரத்து 348 அனுப்பியுள்ளார். 

இருப்பினும் அந்த மர்ம கும்பல் கூடுதல் பணம் கேட்டு தொடர்ந்து மிரட்டியதால் சந்தேகம் அடைந்த சாஃப்ட்வேர் இன்ஜினியர் உடனடியாக சேலம் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போது மோசடியில் ஈடுபட்ட கும்பல் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்தது என தெரியவந்தது. 

இதனை அடுத்து சைபர் கிரைம் போலீசார் மோசடியில் ஈடுபட்ட மர்ம கும்பல் குறித்து விசாரணை நடத்தி தேடி வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

North State gang Fraud lakhs software engineer


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->