திருவள்ளூர் || உடலில் சுடுகஞ்சி ஊற்றிய வடமாநில சிறுமி - சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி அடுத்த சிப்காட் தொழிற்பேட்டை அருகே புதுப்பேட்டை பகுதியில் வடமாநில தொழிலாளர்கள் அதிக அளவில் குடும்பத்தோடு வசித்து வருகின்றனர். அவர்களில் பிகாஷ் ரவிதாஸ் என்பவருக்கு திருமணமாகி ஒரு மகளும், 2 மகன்களும் உள்ளனர்.

இந்த நிலையில், கடந்த 14-ந் தேதி பிகாஷ் ரவிதாசின் மகளான சிறுமி நந்தினி வீட்டில் சமையல் வேலைகளை செய்து கொண்டிருந்தார். அப்போது, அவர் வடிக்க முயன்றதில் எதிர்பாராதவிதமாக பாத்திரம் அவரது வயிற்று பகுதியில் கவிழ்ந்தது. 

இதில் பலத்த காயம் அடைந்த சிறுமி நந்தினி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

இந்த நிலையில், சிறுமி நந்தினி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து தகவலறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை எற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

north state girl died for hot water poured on body


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->