கிருஷ்ணகிரி : 100 கிலோ குட்கா பொருள் கடத்திய வடமாநில இளைஞர் கைது.!!
north state youth arrested for kidnape drugs in krishnagiri
கிருஷ்ணகிரி : 100 கிலோ குட்கா பொருள் கடத்திய வடமாநில இளைஞர் கைது.!!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் அருகே மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் நோக்கி வந்த ஒரு காரை போலீசார் தடுத்து நிறுத்தினர். ஆனால், காரில் இருந்த வாலிபர் காரை நிறுத்தாமல் அதிவேகத்தில் எடுத்து சென்றார்.
இதனால் சந்தேகமடைந்த போலீசார் சம்பவம் குறித்து உடனடியாக தேசிய நெடுஞ்சாலை ரோந்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். அந்த தகவலின் படி ரோந்து வாகன போலீசார் அந்த காரை விரட்டி சென்றுள்ளனர். போலீசார் காரை பின் தொடர்ந்து வருவதைப் பார்த்த அந்த வாலிபர் காரை சாலை ஓரமாக நிறுத்தி விட்டு அருகிலுள்ள ஏரி பகுதிக்கு தப்பி ஓடினார்.
இதைப்பார்த்த போலீசார் விடாமல் ஏரி பகுதிக்கு ஓடிச் சென்ற அந்த வாலிபரை கையும் களவுமாக பிடித்தனர். அதன் பின்னர் போலீசார் அந்த வாலிபர் எடுத்து வந்த வாகனத்தை சோதனை செய்தனர். அப்போது, அந்த காரில் ஐந்து மூட்டையில் சுமார் 100 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் காரை ஓட்டி வந்த வாலிபர் வட மாநிலத்தை சேர்ந்த ஹனுமான் என்பதும் கர்நாடக மாநிலம் ஜிகினி பகுதியில் இருந்து கோயம்புத்தூருக்கு குட்கா பொருள்களை கடத்தி சென்றதும் தெரிய வந்தது.
இதையடுத்து குட்கா கடத்தி வந்த அனுமானை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து கார் மற்றும் குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
north state youth arrested for kidnape drugs in krishnagiri