தமிழகத்தில் 112 நாட்களாக நீடித்துவந்த வடகிழக்கு பருவமழை விடைபெற்றது! - Seithipunal
Seithipunal


தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 14ஆம் தேதி தொடங்கியது. வழக்கமாக, வடகிழக்கு பருவமழை அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலும், சில சமயங்களில் ஜனவரி இரண்டாவது வாரம் வரையிலும் நீடிக்கும். ஆனால், இந்த வருடம் ஜனவரி மாதம் முழுவதும் மழை பெய்தது. பருவநிலை மாற்றத்தால் கடும் குளிர் மற்றும் பனி இருந்தபோதிலும் மழை தொடர்ந்தது.

இந்த வடகிழக்கு பருவமழை, நாடு முழுவதும் பல மாநிலங்களில் மழைப்பொழிவைக் கொடுத்தாலும், தமிழகத்தில் இந்த ஆண்டு இயல்பை விட அதிகமாக மழை பெய்துள்ளது. நவம்பர், டிசம்பர் மாதங்களில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் காரணமாக தமிழகத்தின் ஏரி, குளங்கள், அணைகள் மற்றும் நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பின. 'பெஞ்சல்' புயல் உருவானாலும் பெரிய பாதிப்புகள் ஏதும் ஏற்படாமல் கடந்து சென்றது. இதனால் தென் மாவட்டங்கள், வட மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்தது.

இந்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம், 112 நாட்களாக நீடித்துவந்த வடகிழக்கு பருவமழை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால், மாஹே, கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் நிறைவடைந்துள்ளதாக அறிவித்துள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Northeast monsoon end in tamilnadu


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->