இனி ஒரே டிக்கெட்டில் பஸ், ரயில், மெட்ரோவில் பயணம் செய்யலாம் ! - Seithipunal
Seithipunal


சென்னை : ஒரே டிக்கெட்டில் மாநகர பேருந்து மெட்ரோ ரயிலில் செல்லும் வசதி வரும் டிசம்பர் மாதம் அமலுக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் அண்டை மற்றும் வட மாநிலங்களில் இருந்து வேலைவாய்ப்பு உயர்கல்வி காரணமாக அதிக அளவில் மக்கள் வசித்து வருகின்றனர்.

சென்னை வாழ்மக்கள் தங்கள் அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வதற்கு சென்னை மாநகரப் போக்குவரத்து கழக பேருந்துகள் மின்சார ரயில் சேவைகளை பயன்படுத்தி வருகின்றனர். இதில் சிலர் தங்கள் அலுவலகம் செல்வதற்கு மூன்று வித போக்குவரத்து சேவைகளும் பயன்படுத்தி வருகின்றனர்.

தற்போது மூன்று சேவைகளும் தனித்தனியாக டிக்கெட் பெற்று பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. இந்த நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இருந்து நாள்தோறும் பணிக்கு செல்லும் லட்சகணக்கான மக்களின் சிரமத்தை  குறைக்கும் வகையில் மூன்று வித போக்குவரத்து சேவைகளும் ஒரே டிக்கெட்டில் பயணிக்கும் வகையில் சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் ஒரு திட்டத்தை செயல்படுத்த உள்ளது.

அதில் முதல் கட்டமாக இந்த திட்டத்தின் கீழ் மாநகர பேருந்துகள் மற்றும் மேட்ரோ ரயிலில் சேவைகளை ஒருங்கிணைந்த ஒரே டிக்கெட்டில் இருந்த இரண்டு சேவைகளையும் பயன்படுத்தும் வகையில் புதிய செயலை உருவாக்கப்பட்டு ஒரே டிக்கெட்டில் பயணிக்கும் முறை டிசம்பர் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்காக பெங்களூரைச் சேர்ந்த மூவிங் டெத் இன்னொவேஷன்ஸ் என்ற நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் மின்சார ரயில் சேவை உள்ளிட்ட மூன்று வகையான போக்குவரத்தில்டிக்கட்டை பயன்படுத்தும் வகையில் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று கூறப்படுகிறது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Now you can travel by bus train and metro in a single ticket


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->