"சாய ஆலையில் இருந்து, வெளியேறிய விஷ வாயு_ பரிதவிக்கும் மக்கள்!
Noxious Gas From Dye Factory
திருப்பூர் அருகே வெங்கமேடு பகுதியில் சாய ஆலையிலிருந்து வெளியேறிய விஷ வாயுவால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறுபட்ட உடல் உபாதைகளுக்கு ஆளானதாக குற்றம் சாட்டப்பட்டது.
இதைத்தொடர்ந்து சட்டப்பேரவை உறுப்பினர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகிய இருவரும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.இந்த விஷவாயு பாதிப்பில் 40 பேர் பாதிப்படைந்ததாக எழுந்த புகாரில் மாநகராட்சி சுகாதாரத்துறையை சேர்ந்தவர்கள் அந்த பகுதியில் வசித்து வரும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பரிசோதனை செய்தனர்.
இதைத்தொடர்ந்து ஆட்சியர் கிறிஸ்துராஜ் , மாநகராட்சி ஆணையர் பவன் குமார், உள்ளிட்டோர் ஆலையில் ஆய்வுகளை மேற்கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பவன் குமார்தெரிவிக்கையில், இப்பகுதியில் வசித்து வரும் அனைவருக்கும் மருத்துவர் பரிசோதனை பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து சமர்ப்பிக்கும் அறிக்கையின் அடிப்படையில் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.முடிவுகள் வரும் வரை ஆலையை இயக்க தற்காலிகமாக தடை செய்ய உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Noxious Gas From Dye Factory