NRHM ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்..வைத்தியநாதன் MLA கோரிக்கை!
NRHM employees should be made permanent. Vaidyanathan MLAs demand
சுகாதாரத்துறையில் பணிபுரியும் NRHM ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் என்ற அடிப்படையில் அவர்களுக்கு ஊதிய உயர்வு வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் திரு. மு. வைத்தியநாதன் கோரிக்கைவிடுத்துள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவை பூஜ்ய நேரத்தில் சட்டமன்ற உறுப்பினர் திரு. மு. வைத்தியநாதன் அவர்கள் பேசியதாவது: நமது புதுச்சேரி மாநிலத்தில் சுகாதாரத்துறையில் பணிபுரியும் NRHM ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் என்ற அடிப்படையில் அவர்களுக்கு ஊதிய உயர்வு வேண்டும். அதாவது இந்த NRHM மருத்துவர்கள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை பணிபுரிகின்றனர். இவர்களுக்கு அரசு வழங்கும் சொற்ப ஊதியத்தை தவிர வேறு எதுவும் வழங்கப்படுவதில்லை. எனவே இவர்களை மானுப்புமிகு முதல்வர் அவர்கள் கருணை உள்ளத்தோடு பணி நிரந்தரம் செய்து அறிவிக்க வேண்டும்.
மேலும் மாண்புமிகு முதல்வர் அவர்கள் கடந்த சட்டசபையில் அறிவித்த வாரிசுதாரர்கள் பணி நியமனத்தில் ஒரு முறை வயது தளர்வு இதுவரை சுகாதாரத்துறையில் செயல்படுத்தப்படவில்லை. இதனை மாண்புமிகு முதல்வர் அவர்கள் இந்த அவையில் ஒரு முறை வயது தளர்வு அறிவிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
மேலும் அரசு சுகாதாரத்துறையில் பணி புரியும் யோகா ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அவர்ளுக்கு ஊதிய உயர்வு அளிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். மேலும் சுகாதார துறையில் கீழ் பணி புரியும் ஆஷா ஊழியர்களின் பணி நேரத்தை நீட்டித்து சம்பள உயர்வு வழங்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
English Summary
NRHM employees should be made permanent. Vaidyanathan MLAs demand