முதல்வரே இதுதான் தன்னாட்சி கட்டிக் காக்கிற லட்சணமா? வெட்கக்கேடு! என்ஐஏ விசாரணைக்கு எதிர்ப்பு! - Seithipunal
Seithipunal


அப்பாவி இஸ்லாமியர்கள் கைதுக்கு யார் பொறுப்பு! மத சாயம் பூசுவது அப்பட்டமான காழ்ப்புணர்ச்சி! - சீமான்! 

கோவை கார் வெடிப்பு சம்பவத்தை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை செய்ய தமிழக அரசு பரிந்துரை செய்ததை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக எதிர்த்துள்ளார். தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணைக்கு பரிந்துரைத்தது மிக தவறான முடிவு என தெரிவித்துள்ளார். இதுகுறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் " வன்முறை செயலில் ஈடுபட்டு சமூக அமைதியை குலைக்க முனைவோர் எவராயினும் அவர்களை சாதி மத பேதங்களுக்கு அப்பாற்பட்டு கடும் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை.

அதே சமயம் இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதாலேயே அச்சமுத்தினரை குற்றவாளிகளாக சித்தரிக்கும் போக்கென்பது மிக ஆபத்தானது. இந்த விபத்து குறித்து காவல்துறையின் விசாரணை நிறைவடைவதற்கு முன்பே இக்கோர நிகழ்விற்கு மத சாயம் பூசுவது அப்பட்டமான மத காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடேயாகும்.

அவ்விபத்தில் நடந்தவுடன் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்து, உரிய ஒத்துழைப்பு வழங்கி வரும் இஸ்லாமிய மக்களை குற்றப்படுத்தும் நோக்கோடு மதவாதிகளால் செய்யப்படும் கருத்து உருவாக்கங்களும் கட்டமைப்புகளும் கடும் கண்டனத்திற்குரியது.

காவல்துறையின் மீது மத சாயம் பூசி மாநில உளவுத்துறையின் தோல்வி என குற்றம் சாட்டும் பாஜகவின் கூற்றை ஏற்றுக் கொண்டுதான் வழக்கை கைமாற்றி விடுகிறதா மாநில அரசு? தன்னாட்சி அதிகாரம் கொண்ட மத்திய புலனாய்வு விசாரணை அமைப்பையே கையகப்படுத்தி பழிவாங்கும் நோக்கத்தோடு எதிர்க்கட்சிகள் மீது பாஜக அரசு ஏவிவரும் நிலையில் கட்டற்ற அதிகாரத்தை கொண்டிருக்கும் தேசிய பலனாய்வு முகமையை இது போன்ற வழக்குகளில் நுழைய வழிவகை செய்வது மாநிலத்தின் இறையாண்மைக்கு எதிரானது இல்லையா? 

ஸ்டோன் சுவாமி, வரவர ராவ் ஆனந்த் டெல்டும்டே போன்ற சமூக செயற்பாட்டாளர்கள் பீமா கொரேகான் வழக்கில் தேசிய புலனாய்வு முகமையால் கைது செய்யப்பட்டுள்ளது போல இந்த வழக்கில் அப்பாவி இஸ்லாமியர்களுக்கும் கைது செய்யப்பட்டால் அதற்கு யார் பொறுப்பேற்பது? தனது பொறுப்பை தட்டி கழிக்க தேசிய புலனாய்வு முகமைக்கு வாசல் திறந்து விடுவது தான் மாநில தன்னாட்சியை கட்டிக் காக்கிற லட்சணமா முதல்வரே? வெட்கக்கேடு! என தனது சீமான் இருக்கையில் குறிப்பிட்டுள்ளார். தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இஸ்லாமிய அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் மௌனம் காத்து வரும் நிலையில் முதல் ஆளராக சீமான் தனது எதிர்ப்பை காட்டியுள்ளார்.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NTK seeman statement about Nia investigation


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->