பிஎஸ்சி நர்சிங் & பிஃபார்ம் மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்.!
Nursing course Last day of tomorrow
பிஎஸ்சி நர்சிங் மற்றும் பிஃபார்ம் உள்ளிட்ட துணை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும்.
நடப்பாண்டுக்காண பிஎஸ்சி நர்சிங் மற்றும் பிஃபார்ம் உள்ளிட்ட மருத்துவ துணை படிப்பதற்கான விண்ணப்பம் கடந்த ஜூன் 19ம் தேதி தொடங்கிய நிலையில் ஜூன் 28ஆம் தேவியுடன் முடிவடைந்தது.
இந்த நிலையில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்று ஜூலை 10ஆம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்ட நிலையில் தற்போது ஜூலை 12 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
எனவே, பிஎஸ்சி (நர்ஸிங்), பிஓடி, பிபிடி, பி.பார்ம் உள்ளிட்ட படிப்புகளில் சேர tnhealth.tn.gov.in, tnmedicalsection.org என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வுக்கு பிறகு துணை மருத்துவ படிப்பதற்கான கலந்தாய்வு தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Nursing course Last day of tomorrow