ஆம்னி பேருந்து கட்டண உயர்வுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் - அ.தி.மு.க. சார்பில் வலியுறுத்தும் பன்னீர்செல்வம்..! - Seithipunal
Seithipunal


முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, "ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அளவுக்குமீறி கட்டணத்தை உயர்த்துவதும், இதனை அரசு வேடிக்கை பார்ப்பதும் வாடிக்கையாகி விட்டது. 

அந்த வகையில், இந்த ஆண்டு ஆயுத பூஜை, விஜய தசமி போன்ற பண்டிகைகளை முன்னிட்டு, தங்கள் சொந்த ஊர்களுக்கு மக்கள் புறப்பட திட்டமிட்டிருக்கும் சூழ்நிலையில், குளிர்சாதன படுக்கை வசதி கொண்ட பேருந்துகளில் சென்னையில் இருந்து திருச்சி வரை செல்ல ரூ.2 ஆயிரமும், மதுரை வரை செல்ல ரூ. 2,500-ம், கோவை செல்ல ரூ.2,350-ம், திருநெல்வேலி செல்ல ரூ.2,700-ம், தூத்துக்குடி செல்ல ரூ.2,500-ம், நாகர்கோவில் செல்ல கிட்டத்தட்ட ரூ. 4 ஆயிரமும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக ஆதாரத்துடன் செய்திகள் வருகின்றன. 

இந்தப் பேருந்துக் கட்டணம் கிட்டத்தட்ட விமானக் கட்டணத்திற்கு இணையாக உள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். முதல்-அமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, பண்டிகை காலங்களிலும், விடுமுறை நாட்களிலும் அரசுப் பேருந்துகளை அதிக அளவில் இயக்கவும், பொது மக்கள் மற்றும் பேருந்து உரிமையாளர்களின் நலன்கள் பாதிக்காத வகையில் ஆம்னி பேருந்துகளில் நியாயமான கட்டணத்தை நிர்ணயிக்கவும் நடவடிக்கை எடுத்து, இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்று அ.தி.மு.க. சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" என்று ஓ பன்னீர்செல்வம் தனது அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

o paneerselvam report for bus bill


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->