#சென்னை || போலீஸ் வாகனம் மோதியதில் மூதாட்டி பலி.! - Seithipunal
Seithipunal


சென்னை மெரினா கடற்கரை சாலையில் போலீஸ் வாகனம் மோதி மூதாட்டி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னையை அடுத்த அம்பத்தூர் பகுதி கள்ளிகுப்பம் பகுதியை சேர்ந்த 50 வயதான மேரி அண்ணா சதுக்கத்தில் உள்ள தலைவர்களின் சமாதியை பார்ப்பதற்காக இன்று காலை தனது உறவினர்களுடன் மெரினா கடற்கரைக்கு வந்துள்ளார்.

அண்ணா சதுரத்தில் உள்ள தலைவர்களின் சமாதியை பார்த்துவிட்டு மீண்டும் வீடு திரும்புவதற்காக சாலையை கடக்க முயன்ற போது அவ்வழியாக வேகமாக வந்த காவல்துறை வாகன மோதியதில் மேரி படுகாயம் அடைந்தார்.

இதனை கண்ட உறவினர்களும் அக்கம் பக்கத்தினரும் அவரை மீட்டி சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஓமந்தூரார் மருத்துவமனையில் மேரியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே உயர்ந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். 

இதனை அடுத்து இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த அண்ணா சதுக்கம் காவல் நிலைய போலீசார் காவல்துறையினர் வாகனம் ஓட்டிய நபரை விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் சென்றுள்ளனர். மேலும் மேரியின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Old lady dies hit by police vehicle in Chennai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->