சொத்துக்காக மூதாட்டியை வீட்டு சிறையில் வைத்த உறவினர் - திருவாரூரில் சோகம்.! - Seithipunal
Seithipunal


திருவாரூர் மாவட்டத்தில், தில்லைவிளாகம் மேலக்கரை கிராமத்தை சேர்ந்தவர் பழனித்துரை - ஜெயம் தம்பதியினர். இதில் பழனித்துரை கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு இறந்த நிலையில் ஜெயம் மட்டும் தனது வீட்டில் தனியாக வசித்து வந்தார். இவருக்கு வீட்டுடன் உள்ள சொத்துகளும், வேறு இடங்களில் சில நிலங்களும் உள்ளது. 

இந்த நிலையில், இவரின் சொத்துக்களுக்கு ஆசைப்பட்ட அவரது உறவினர்கள் சிலர் மூதாட்டிக்கு உணவு கொடுத்து பராமரித்து வந்துள்ளனர். அதில், ஒருவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு மூதாட்டி ஜெயத்தை வீட்டில் வைத்து பூட்டி ஜன்னல் வழியாக சாப்பாடு கொடுத்து வந்துள்ளார். 

இதனால், மூதாட்டி வீட்டின் ஜன்னல் வெளிச்சத்தில் சரியான உணவு, குடிநீர், மின்சாரம் எதுவும் இல்லாமல், உடம்பில் உடை கூட இல்லாமல், உடல் மெலிந்த நிலையில் தனிமையில் தவித்து வந்துள்ளார். மேலும், அங்கேயே இயற்கை உபாதைகளை கழித்தும், அதே இடத்தில் உறங்கியும் பரிதவித்து வந்துள்ளார். 

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறுகையில்:- "தனியாக இருந்த மூதாட்டியின் சொத்துக்களை அபகரிப்பதற்காக, பராமரிப்பது போன்று நடித்து சுமார் 6 ஆண்டுகளாக வீட்டில் பூட்டி வைத்து தினமும் ஒரு வேலை உணவு மட்டுமே கொடுக்கின்றனர். அதிலும் தற்போது எப்போதாவது தான் உணவு கொடுக்கின்றனர். 

மூதாட்டியின் இந்த நிலையை பார்த்து நாங்கள் மனவேதனையில் உள்ளோம் என்று தெரிவித்தனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர், போலீஸ் சூப்பிரண்டு மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே, மூதாட்டி பராமரிப்பு இன்றி தவிக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

old lady house prison in tiruvarur for property


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->