தீவிரமடையும் கொரோனா பரவல்.. "ஒரே நாளில் 5,357 பேர் பாதிப்பு".. கோவையில் மூதாட்டி பலி.!!
Old woman died in coimbatore due to Corona
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக நேற்று முன்தினம் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார்.
இந்த நிலையில் நேற்று இந்தியா முழுவதும் ஒரே நாளில் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்துள்ளது. மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி கடந்த 24 மணி நேரத்தில் இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,357 என பதிவாகியுள்ள நிலையில் ஒட்டுமொத்தமாக இந்தியா முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவது எண்ணிக்கை 32,814 ஆக அதிகரித்துள்ளது.
அந்த வகையில் தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 329 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 108 பேருக்கும், செங்கல்பட்டில் 32 பேருக்கும், கன்னியாகுமரியில் 27 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதன்படி தற்போது தமிழகத்தில் கொரோனா நோய்க்கு சிகிச்சை பெற்று வருவது எண்ணிக்கை 1,703 ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும் 156 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையத்தை சேர்ந்த 60 வயது மூதாட்டி ஒருவர் பக்கவாத பாதிப்புக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையின் பொழுது தொற்று இருப்பது உறுதியானது. இதன் காரணமாக மூதாட்டிக்கு கொரோனாவுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
English Summary
Old woman died in coimbatore due to Corona