விஷம் குடித்து முதியவர் தற்கொலை
Oldman suicide in theni
தேனி மாவட்டத்தில் விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டு உள்ளார்.
தேனி மாவட்டத்தில் உள்ள காட்டுநாயக்கன்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் ஜக்கன்(73). இவருடைய மகன் முருகேசன்.
இந்நிலையில், ஜக்கன் உடல்நிலை குறைவால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்து வாழ்க்கையில் வெறுப்படைந்த ஜக்கன், வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து அவரது மகன் முருகேசன், கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.