தமிழகத்தில் பள்ளிகள் மூடப்படுமா? அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடி பேட்டி.! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் 650 க்கும் மேற்பட்டோர் ஒமைக்ரான் நோய்தொற்றுக்கு பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். இதில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அதனை தொடர்ந்து டெல்லி, தெலுங்கானா, கேரளா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று பாதிப்பு அதிகமாகி உள்ளது. 

இதில் தமிழகத்தில் 34 பேர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று 11 பேருக்கு ஒமைக்ரான் நோய் தொற்று உறுதியாகி உள்ளது. ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் தொடர்ந்து செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 45 ஆக இருக்கிறது. 

இந்நிலையில், தமிழகத்தில் ஒமைக்ரான் வகை கொரோனா பரவல் காரணமாக பள்ளிகளை மூட வேண்டிய சூழ்நிலை வருமா என்று, பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் இடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்க்கு அவர் அளித்த பதிலில், "பள்ளிகளை மூடுவது தொடர்பாக மருத்துவ நிபுணர்களுடன் கலந்தாலோசித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் முடிவெடுப்பார்" என்று பதிலளித்துள்ளார்.

முன்னதாக, ஒமிக்ரான் அச்சுறுத்தலால் தலைநகர் டெல்லியில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.  
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

OMICRON ISSUE MINISTER MAHESH PRESS MEET


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->