இத்தனை மடங்கு உயர்வா? சென்னையை திரும்பும் மக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!
Omni bus fares hiked 5 times
தொடர் விடுமுறை நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை வரும் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் ஐந்து மடங்கு வரை திட்டமிட்டு உயர்த்தப்பட்டுள்ளதாக பயணிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
மிலாடி நபி , காந்தி ஜெயந்தி மற்றும் வார இறுதி நாட்கள் என 4 நாள் தொடர் விடுமுறை நாளையுடன் முடிவடையவுள்ள நிலையில் பயணிகள் அதிக அளவில் குவிவதால் சென்னை வரும் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் பன்மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
நெல்லை - சென்னை 5000 ரூபாயும் , மதுரை - சென்னை 4,800 ரூபாயும் , கோவை - சென்னை 3000 ரூபாய் வரையும் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு முதல் ஆம்னி பேருந்துகளை கட்டணம் மேலும் உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதே போன்று திருச்சியிலிருந்து சென்னைக்கு குறைந்தபட்சம் 1,500 ரூபாயிலிருந்து அதிகபட்சம் 3,000 ரூபாய் வரையும், கோவையில் இருந்து சென்னைக்கு குறைந்தபட்சம் 1,500 ரூபாயிலிருந்து அதிகபட்சம் 3,000 ரூபாய் வரையும், மதுரையிலிருந்து சென்னை சென்னைக்கு குறைந்தபட்சம் 1,900 ரூபாயிலிருந்து அதிகபட்சம் 4,800 வரையும்,
தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு குறைந்தபட்சம் 2,100 ரூபாயிலிருந்து, அதிகபட்சம் 3,500 ரூபாய் வரையும், நெல்லையிலிருந்து சென்னைக்கு குறைந்த பட்சம் 2,000 ரூபாயில் இருந்து அதிகபட்சம் 5,000 ரூபாய் வரையும் சேலத்திலிருந்து சென்னைக்கு குறைஞ்சபட்சம் 1,500 ரூபாயில் இருந்து அதிகபட்சம் 2,500 ரூபாய் வரையும் ஆம்னி பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.
English Summary
Omni bus fares hiked 5 times