ஒருபுறம் சோதனை: மறுபுறம் டெல்லி பறந்த துரைமுருகன்..அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!
On the one hand Durai Murugan flew to Delhi Politics in the political circle
அமலாக்கத்துறை சோதனை நடைபெற்ற நிலையில் அமைச்சர் துரைமுருகன் ஏர் இந்தியா விமானத்தில் டெல்லி புறப்பட்டார்.அமைச்சர் துரைமுருகனின் இந்த டெல்லி பயணம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள திமுக பொதுச் செயலரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் மற்றும் அவரது மகனும் திமுக எம்பியுமான கதிர் ஆனந்த் ஆகியோரின் வீடுகளில் நேற்று வெள்ளிக்கிழமை அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியானது.மேலும், துரைமுருகனின் ஆதரவாளர் பூஞ்சோலை சீனிவாசன் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் சில ஆவணங்கள் அமலாக்கத்துறையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.இதனால் காட்பாடியில் நேற்று பரபரப்பு ஏற்பட்டதுடன் அங்கு திமுக நிர்வாகிகள் ஒன்றுகூடியதால் பதற்றம் நிலவியது.இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டன.
இதனிடையே, காட்பாடி அடுத்த கிருஸ்டியான்பேட்டையில் உள்ள கதிர் ஆனந்துக்கு சொந்தமான கல்லூரியில் இரண்டாவது நாளாக விடிய விடிய அமலாக்கத்துறையினர் நடத்திய சோதனை ஞாயிற்றுக்கிழமை இன்று அதிகாலை நிறைவடைந்தது. இந்த நிலையில், சென்னையில் இருந்து நேற்று இரவு 10 மணியளவில் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் மூலம் அமைச்சர் துரைமுருகன் மற்றும் திமுக மக்களவை உறுப்பினர் ஜெகத்ரட்சகன் ஆகியோர் டெல்லி சென்றுள்ளனர்.வேலூரில் உள்ள தனது மகன் கதிர் ஆனந்தின் வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில் துரைமுருகனின் டெல்லி பயணம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக அரசுமுறைப் பயணமாக துரைமுருகன் தில்லிக்கு சென்றுள்ளாரா? அல்லது தனிப்பட்ட காரணங்களுக்காக சென்றுள்ளாரா? என்ற தகவல்கள் வெளியாகவில்லை.விரைவில் இதுகுறித்தான தகவல் வெளியாகும் என எதிர்பாக்கலாம் .
English Summary
On the one hand Durai Murugan flew to Delhi Politics in the political circle